செத்துக் கொண்டிருக்கிறதா ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகள்?... யுவ்ராஜ் சிங் சொல்லும் அதிர்ச்சி கருத்து!

Webdunia
புதன், 18 ஜனவரி 2023 (15:27 IST)
இலங்கைக்கு எதிரான மூன்று போட்டிகளையும் வென்ற இந்திய அணி இலங்கை அணியை வொயிட்வாஷ் செய்தது. நேற்றைய போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 390 ரன்கள் குவித்தது. விராட் கோலி மற்றும் சுப்மன் கில் ஆகிய இருவரும் சகமடித்தனர். விராட் கோலி 110 பந்துகளில் 166 ரன்கள் சேர்த்தார்.

இந்த போட்டி பற்றி சுப்மன் கில் மற்றும் கோலி ஆகியோரின் இன்னிங்ஸைப் பாராட்டி ட்வீட் செய்த யுவ்ராஜ் சிங் மற்றொரு விஷயத்தையும் கவனப்படுத்தினார். அதில் “இலங்கைக்கு எதிரான மூன்றாவது போட்டியில் மைதானம் பாதி காலியாக இருந்தது. இதன் மூலம் ஒருநாள் போட்டிகள் அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறதா?” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்