சைலண்ட்டா சாதிக்கும் இந்திய மகளிர் அணி: சிக்கிய தென் ஆப்ரிக்கா!

Webdunia
வியாழன், 8 பிப்ரவரி 2018 (16:43 IST)
இந்தியா மற்றும் தென் ஆப்ரிக்கா அணிகளுக்கு இடையே ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இந்திய மகளிர் மற்றும் ஆண்டுகள் அணி தென் ஆப்ரிக்காவை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது. 
 
நேற்று மூன்றாவது ஒருநாள் போட்டியை இந்திய ஆண்கள் அணி கைப்பற்றிய நிலையில், மகளிர் அணியும் 2-0 என்ற கணக்கில் தென் ஆப்ரிக்காவிற்கு எதிரான தொடரை வென்றது. 
 
இந்திய மகளிர் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் விளையாட தென் ஆப்ரிக்கா சென்றுள்ளது. இந்நிலையில், முதல் ஒருநாள் போட்டியில் இந்திய மகளிர் அணி 88 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 
 
நேற்று நடந்த இரண்டாவது போட்டியில், 178 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. நேற்றைய போட்டியின் போது முதலில் விளையாடிய இந்திய மகளிர் அணி 3 விக்கெட்களை மட்டும் இழந்து, 302 ரன்கள் குவித்தது. 
 
அடுத்து ஆடிய தென்னாப்பிரிக்க அணி, 30.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து, 124 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 178 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய மகளிர் அணி தொடரை வென்றது.
 
ஸ்மிருதி மந்தனா நேற்றைய ஆட்டத்தில், 129 பந்துகளில் 135 ரன்கள் குவித்தார். ஆண்கள் அணியில் கோலி சதமடித்து இந்தியாவை வெற்றி பெற வைத்தது போல, ஸ்மிருதி மந்தனா பெண்கள் அணியில் ஆட்டத்தில் வெளுத்துவாங்கியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்