கெய்ல் அதிரடியில் உலக சாதனைப் படைத்தது வெஸ்ட் இண்டீஸ் அணி

திங்கள், 12 ஜனவரி 2015 (16:22 IST)
தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான போட்டியில் கிறிஸ் கெய்ல் அதிரடியில் வெண்டீஸ் அணி உலக சாதனைப் படைத்துள்ளது.
 
ஜோகன்ஸ்பெர்க்கில் உள்ள வாண்டரர்ஸ் மைதானத்தில் நடைபெற்ற தென் ஆப்பிரிக்கா - வெஸ்ட் இண்டீஸ் இடையிலான 2 ஆவது டி-20 போட்டி நடைபெற்றது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் டேரன் சமி முதலில் பீல்டிங்கைத் தேர்வு செய்தார்.
 

 
அதன்படி முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 231 ரன்கள் குவித்தது. அந்த அணியில் டூ பிளஸ்ஸிஸ் அதிரடியாக ஆடி 119 ரன்கள் (56 பந்துகள் 11 பவுண்டரி, 5 சிக்ஸர்கள்) குவித்தார். மில்லர் 26 பந்துகளில் 47 (4 பவுண்டரி, 3 சிக்ஸர்) ரன்கள் எடுத்தார்.
 
பின்னர் களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி 19.2 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 236 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. வெஸ்ட் இண்டீஸின் கிறிஸ் கெய்ல் இந்த சென்ற போட்டியைப் போல இந்த ஆட்டத்திலும் ருத்ர தாண்டவம் ஆடினார்.
 
அவர் இந்த போட்டியில் 41 பந்துகளில் 90 ரன்கள் (9 பவுண்டரி, 7 சிக்ஸர்) குவித்தார். மேலும், சாமுவேல்ஸ் 39 பந்துகளில் 60 ரன்கள்  (7 பவுண்டரி ,2 சிக்ஸர்) குவித்து வெற்றிக்கு வித்திட்டனர். தென் ஆப்பிரிக்கா அணியில் இம்ரான் தாகிர் மட்டுமே 10 ரன்ரேட்டிற்கும் குறைவாகப் பந்து வீசியுள்ளார்.
 
இதன் மூலம் டி-20 வரலாற்றில் அதிகப்பட்ச ரன் துரத்தல் என்ற சாதனையை வெஸ்ட் இண்டீஸ் தன் வசமாக்கியது. இதற்கு முன்னர் 211 ரன்களை இலங்கைக்கு எதிராக இந்தியா எடுத்து வெற்றி பெற்றதே உலக சாதனையாக இருந்தது.
 
இந்த மைதானத்தில்தான் ஒருநாள் போட்டியில் அதிகபட்ச ரன் சேஸிங்கான ஆஸ்திரேலியாவின் 434 ரன் இலக்கை, 438 ரன்களை எடுத்தது தென் ஆப்பிரிக்கா வெற்றிபெற்றது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்