பிறகு முதல் இன்னிங்க்ஸில் முரளி விஜய் 53 ரன்கள், புஜாரா 73 ரன்கள், ரஹானே 62 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். பின்னர் தொடர்ந்து ஆடிய விராட் கோலி ஆடிக்கொண்டிருக்கையில், மிட்சல் ஜான்சன் பவுன்சராக வீசய பந்தை தவிர்க்க முயன்றும், அது அவரின் ஹெல்மெட்டை பதம் பார்த்தது.
ஆனால் உடனடியாக அருகிலிருந்த ஆஸ்திரேலிய வீரர்கள் அனைவரும் விராட் கோலி அருகே பதறியடித்து வந்து அவரை தட்டிக் கொடுத்துச் சென்றனர். அதேபோல ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க், மிட்சல் ஜான்சனின் முதுகில் தட்டிக் கொடுத்து ஆறுதல் தெரிவித்தார்.
இதற்கிடையில், விராட் கோலி டெஸ்ட் அரங்கில் தனது 7ஆவது சதத்தை நிறைவு செய்தார். அவர் 184 பந்துகளை சந்தித்து 115 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். ஆட்டநேர முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 369 ரன்கள் குவித்துள்ளது.