உடலுக்கு கேடு விளைவிக்கும் பெப்சி விளம்பரத்தில் நடிக்க மாட்டேன்; கோலி அதிரடி

புதன், 7 ஜூன் 2017 (17:50 IST)
உடலுக்கு தீங்கும் விளைவிக்கும் பானங்கள் எடுத்துக்கொள்வதை நிறுவிட்டேன். இதனால் இனி பெப்சி விளம்பரங்களில் நடிக்க மாட்டேன் என இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.


 

 
விளையாட்டு வீரர்களுக்கு உடல் நலம் மிக அவசியம். இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி பல நிறுவனங்களுக்கு விளம்பரத் தூதராக உள்ளார். 6 ஆண்டுகளாக பெப்சி நிறுவனத்தின் விளம்பரத் தூதராக உள்ளார். கடந்த மாதம் 30ஆம் தேதியுடன் இவரின் ஒப்பந்தம் முடிவடைந்தது. 
 
இதையடுத்து ஒப்பந்தத்தை நீடிக்க பெப்சி நிறுவனம் கோலியை அணுகியபோது, உடலுக்கு நலன் இல்லாத ஒரு பொருளை விற்கும் விளம்பர நாயகனாக இருக்க எனக்கு மனமில்லை. அதானால் இந்த ஒப்பந்தம் நீடிக்க வேண்டாம் என தெரிவித்துள்ளார்.
 
மேலும் இதுகுறித்து விராட் கோலி கூறியதாவது:-
 
நான் 18 பொருட்களின் நிறுவனத்திற்கு விளம்பர தூதராக உள்ளேன். ஆனால் ஒப்பந்தமாக பெப்சி பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஒப்பந்தம். இருந்தாலும் இதனால் கிடைக்கும் பணம் எனக்கு தேவையில்லை என கருதுகிறேன்.   
 
நான் எனது உடலை ஃபிட்டாக வைத்திருக்க தேவையில்லாத, உடலுக்கு தீங்கான உணவுகள் மற்றும் பானங்களை எடுத்துக்கொள்வதில்லை, என்றார்.

வெப்துனியாவைப் படிக்கவும்