கடந்த சில வாரங்களுக்கு முன் இலங்கை - ஆஸ்திரேலியா, இந்தியா - வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான் - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் நடைபெற்றது.
இதில், பாகிஸ்தான் 111 புள்ளிகளுடன் முதல் இடத்தையும், இந்தியா 110 புள்ளிகளுடன் 2-வது இடத்தையும் பிடித்தது.
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்டில் இந்தியா 197 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 2-வது போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் 30-ந்தேதி தொடங்குகிறது. இதில் இந்தியா வெற்றி பெற்றால், டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் இடத்தைப் இந்திய கிரிக்கெட் அணி பிடிக்கும்.