டி-20 உலகக் கோப்பை: நியூசிலாந்திற்கு எதிரான இந்திய அணி அறிவிப்பு!

Webdunia
திங்கள், 31 அக்டோபர் 2022 (19:46 IST)
நியூசிலாந்திற்கு எதிரான -டி-20 உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணியில் விளையாடவுள்ள வீரர்களின் பட்டியலை பிசிசிஐ அறிவித்துள்ளது.

டி-20  உலகக் கோப்பை போட்டியில், பாகிஸ்தான் உள்ளிட்ட அணிகளுக்கு எதிராக சிறப்பாக விளையாடி அணியின் வெற்றி  பெற்ற நிலையில், இன்று நடந்த  இந்திய அணி 3 போட்டிகளில் விளையாடி 2ல் வெற்றி 1 தோல்வி என 4 புள்ளிகளுடன் 2 ஆம் இடத்திலுள்ளது.

நேற்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 133 ரன்கள் எடுத்தது.

இதனை அடுத்து பேட்டிங் செய்த தென்ஆப்பிரிக்கா அணி 19.4 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

இந்திய அணியின் தோல்வி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், அணியில் தேர்வில் மாற்றம் வேண்டுமென பலரும் குரல் கொடுத்து வந்தனர்.

இந்த நிலையில் அடுத்து நடக்கவுள்ள நியூசிலாந்திற்கு எதிரான போட்டியில் இந்திய அணியில் விளையாடவுள்ள வீரர்களின் பட்டியலை பிசிசிஐ அறிவித்துள்ளது.

அதில், ஹிகர் தவான் கேப்டனாகவும், ரிஷப் பண்ட் துணைக் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளனர், இவர்களின் தலைமையில், சுப்மன் கில், தீபக் ஹூடா, சூர்யகுமார் யாதவ், ஸ்ரேயாஸ் ஐயர், சஞ்சு சாம்சன்,வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாகூர், சஷபாஸ், அகமது, சஹால், குல்தீப் யாதவ்,  மாலிக் , குல்தீப் சென், தீபக் சாஹர், அர்தீப் சிங் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.

இளம் வீரர்களைக் கொண்ட இந்திய அணி சாதிக்கும் என தெரிகிறது.

Edited by Sinoj

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்