இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன், இந்திய அணியை முதலில் பேட் செய்யுமாறு கேட்டுக் கொண்டார். அதன்படி ஆட்டத்தை துவங்கிய இந்திய அணி மொத்தம் 7 விக்கெட்டுகள் இழந்து 147 ரன்கள் எடுத்தது. இதில் தோனி மட்டும் கடைசி வரை ஆட்டமிழக்காமல், 27 பந்துகளில் 3 பவுண்டரிகள் உட்பட 36 ரன்கள் எடுத்தார்.
எனவே,148 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இங்கிலாந்து அணி ,18.1 ஓவரில் 3 விக்கெட் மட்டும் இழந்து, 148 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.