டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட்: அதிக ரன்கள் அடித்த வீரர்களில் கோலி முதலிடம்!

Webdunia
புதன், 2 நவம்பர் 2022 (14:54 IST)
டி-20உலகக் கோப்பையில் அதிக ரன்கள் எடுத்த வீரர்களின் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார் விராட் கோலி.

ஆஸ்திரேலியாவில் தற்போது, டி-20 உலகக் கோப்பை போட்டிகள் நடந்து வருகிறது. இதில்,இந்திய அணி சிறப்பாக விளையாடி வருகிறது.

இப்போட்டியின் முதலிரண்டு ஆட்டத்தில் கோலி  அதிரடி காட்டினார். அதனால் அவர் மீண்டும் ஃஃபார்முக்கு திரும்பியதாக ரசிகர்கள் கொண்டாடினர்.

கடந்த போட்டியில் நடந்த 62 ரன்கள் மட்டுமே எடுத்தார். எனவே, டி-20 உலகக் கோப்பையில் அதிக ரன் கள் எடுத்த வீரர்கள் வரிசையில் இரண்டாம் இடமிருந்த கிறிஸ்கெயிலை(965) முந்தி கோலி (989) அந்த இரண்டாம் இடம் பிடித்தார்.

ALSO READ: கோலியின் அறையை வீடியோ எடுத்த ஊழியர் பணி நீக்கம்- !
 
கடந்த 30 ஆம் தேதி ஆட்டத்தில் கோலி 11 ரன் கள் அடித்தபோது, டி-20 உலகக்கோப்பையில் அதிக ரன் கள் அடித்த வீரர்கள் வரிசையில் முதலிடத்தில் உள்ள  ஜெயவர்தனே( இலங்கை -1016) சாதனையை முறியடித்து, விராட் கோலி அதிக ரன்கள் குவிந்த வீரராக முதலிடம் பிடித்துள்ளார்.ரோஹித் சர்மாவும் இந்த சாதனையை விரைவில் நிகழ்த்த உள்ளது குறிப்பிடத்தக்கது.

Edited by Sinoj

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்