இந்த போட்டியில் பாகிஸ்தான் அணியின் சிறந்த கூட்டணியான பாபர் ஆசம்- முகமது ரிஸ்வான் ஜோடியை வீழ்த்த இந்திய அணியின் முன்னாள் வீரர் இர்பான் பதான் அறிவுரை வழங்கியுள்ளார். அதில் “அவர்கள் இருவரையும் கட்டுப்படுத்த ஸ்டம்ப்புக்கு உள்ளேயும், அவர்களின் உடலிலும் வீசவேண்டும். அப்போதுதான் அவர்கள் திணறுவார்கள். எல்பிடபுள்யு மூலமாக அவுட் ஆகவும் வாய்ப்புள்ளது.” எனக் கூறியுள்ளார்.
இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா “பாகிஸ்தானுக்கு எதிரான போட்டி இரு அணிகளுக்கும் சவாலாக இருக்கும். அந்த போட்டியில் இந்திய அணி வென்றுவிட்டால், அதன் பிறகு கோப்பையை வெல்வது கூட எளிதுதான்” எனக் கூறியுள்ளார்.