அதே கடப்பாறை லைன் அப்.. டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் பேட்டிங் தேர்வு..! – சமாளிக்குமா குஜராத் டைட்டன்ஸ்?

Prasanth Karthick

ஞாயிறு, 31 மார்ச் 2024 (15:35 IST)
இன்றைய ஐபிஎல் சீசனில் மதிய போட்டியில் சன்ரைசர்ஸ் அணியும் குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதிக் கொள்ளும் நிலையில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது.



முன்னதாக 2 போட்டிகளில் விளையாடி 1 போட்டியில் வெற்றி பெற்றுள்ள சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி போட்டியிட்ட இரு போட்டிகளிலுமே 200+ ரன்களை குவித்தது. கடந்த போட்டியில் 277 ரன்களை குவித்து ஐபிஎல் வரலாற்று சாதனையும் படைத்தது.

குஜராத் டைட்டன்ஸ் அணியும் 2 போட்டிகளில் ஒன்றில் வெற்றியுடன் புள்ளி பட்டியலில் 8வது இடத்தில் உள்ளது. எனவே இரண்டாவது வெற்றியை பெற குஜராத் டைட்டன்ஸ் தீவிர முயற்சிகளை மேற்கொள்ளும். குஜராத்தின் பவுலிங்கும் வலிமையானதாக அமைந்துள்ளது.

சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி: மயங்க் அகர்வால், ட்ராவிஸ் ஹெட், அபிஷேக் ஷர்மா, எய்டன் மர்க்ரம், ஹென்ரிக் க்ளாசன், அப்துல் சமத், சபாஸ் அஹமத், பேட் கம்மின்ஸ், புவனேஷ்வர் குமார், மயங்க் மர்கண்டே, ஜெய்தேவ் உனத்கட்

குஜராத் டைட்டன்ஸ் அணி: வ்ரிதிமான் சாஹா, ஷுப்மன் கில், ஒமர்சாய், விஜய் ஷங்கர், ராகுல் தெவாட்டியா, ரஷித் கான், உமேஷ் யாதவ், நூர் அகமது, மோகித் சர்மா, தர்ஷன் நல்கண்டே,

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்