உலக கோப்பை டி20 அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து – இந்தியா அணிகள் போட்டியிட்டன. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 168 ரன்களை எடுத்தது. அடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணியின் ஜாஸ் பட்லர், அலெக்ஸ் ஹேல்ஸ் விக்கெட்டே இழக்காமல் 16 ஓவர்களில் 170 ரன்களை குவித்து வெற்றியை கைப்பற்றினர்.
இதையடுத்து உலகக்கோப்பையில் இருந்து வெளியேறிய இந்திய அணியை முன்னாள் வீரர்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். இதுகுறித்து பேசியுள்ள இந்திய அணியின் முன்னாள் வீரரான சுனில் கவாஸ்கர் “இந்திய அணியில் வீரர்களை விட அதிகளவில் சப்போர்டிங் ஊழியர்கள் உள்ளனர். இதனால் வீரர்கள் யாருடைய அறிவுரையைக் கேட்பது என்று குழப்பம் அடைவார்கள். நாங்கள் விளையாடிய போதோ அல்லது 2011 உலகக் கோப்பையை வென்ற போது இவ்வளவு ஊழியர்கள் அணியில் இல்லை” எனக் கூறியுள்ளார்.