ஸ்காட்லாந்தை பந்தாடியது இலங்கை; 148 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி

புதன், 11 மார்ச் 2015 (17:35 IST)
இன்று நடைபெற்ற உலகக்கோப்பை லீக் போட்டியில் ஸ்காட்லாந்தை 148 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இலங்கை அணி அபார வெற்றி பெற்றது.
 
உலக கோப்பை போட்டியின் 35ஆவது லீக் ஆட்டம் ஓவல் மைதானத்தில் இலங்கை - ஸ்காட்லாந்து அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் ஆஞ்சலோ மேத்யூஸ் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
 
வெற்றிக் களிப்பில் இலங்கை அணியினர்
அதன்படி தொடக்க ஆட்டக்காரர்களாக திரிமன்னேவும், தில்ஷனும் களமிறங்கினர். தொடக்க ஆட்டக்காரர் திரிமன்னே 21 பந்துகளில் வெறும் 4 ரன்களில் வெளியேறினார்.பிறகு களமிறங்கிய சங்ககாராவும், மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் தில்ஷனும் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 
 
தில்ஷன் 54 பந்துகளில் [6 பவுண்டரிகள்] தனது அரைச்சதத்தை பூர்த்தி செய்தார். சிறிது நேரத்தில் சங்ககராவும் 56 பந்துகளில் [4 பவுண்டரிகள்] தனது அரைச்சதத்தை பதிவு செய்தார். பின்னர் இருவரும் அதிரடி ஆட்டத்தின் மூலம் தங்கள் சதத்தை பூர்த்தி செய்தனர்.
 
சதமடித்த குமார் சங்ககரா
தில்ஷன் 99 பந்துகளில் [10 பவுண்டரிகள், 1 சிக்ஸர்] 104 ரன்னுக்கு வெளியேறினர். அடுத்து வந்த ஜெயவர்த்தனே 2 ரன்களில் வெளியேறினார். அடுத்து உலகக்கோப்பை போட்டிகளில் தொடர்ந்து தனது 4 ஆவது சதத்தை 86 பந்துகளில் [9 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள்] சங்ககாராவும் பதிவு செய்தார்.
 
பின்னர் சிறிது நேரத்தில் கேட்ச் ஆகி சங்ககரா 124 ரன்களுக்கு அவுட்டனார். அதிரடியாக ஆடிய அணி கேப்டன் ஆஞ்சலோ மேத்யூஸ்  மேத்யூஸ், 21 பந்துகளில் [1 பவுண்டரி, 6 சிக்ஸர்கள்] 51 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
 
பின்னர் களமிறங்கிய வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழக்க இலங்கை அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 363 ரன்களை குவித்தது. ஸ்காட்லாந்து தரப்பில் ஜோஸ் டாவே 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
 
மேலும் அடுத்தப் பக்கம்..

பின்னர் வெற்றிக்கு 364 ரன்கள் தேவை என்ற இலக்குடன் ஸ்காட்லாந்து அணி களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் கெய்ல் கோட்சர் ரன் ஏதும் எடுக்காமலும், மெக்லியோட் 11 ரன்னிலும், மாட் மக்கான் 19 ரன்களிலும் வெளியேற அந்த அணி 44 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தவித்தது.
 
அடுத்து களமிறங்கிய மாம்சன், கோல்மென் இணை அணியை வீழ்ச்சியிலிருந்து தடுத்து நிறுத்தியது. அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரைச்சதத்தை எட்டினர். இதனால் அந்த அணி 26.3 ஓவர்களில் 150 ரன்களை கடந்தது.
 
மாம்சென் மற்றும் கோல்மென் இணை
ஆனால் இருவருமே அடுத்தடுத்து வெளியேறி அணியின் வீழ்ச்சிக்கு உள்ளாக்கினர். மான்சன் 60 ரன்களிலும், கோல்மென் 70 ரன்களிலும் வெளியேறினர். ஆனால் அடுத்தடுத்து களமிறங்கிய வீரர்களில் ஒருவரைத் தவிர மற்ற அனைவரும் ஒற்றை இலக்கத்தில் வெளியேறினர்.
 
முடிவில் ஸ்காட்லாந்து அணி 43.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து  215 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் இலங்கை அணி 148 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்டநாயகன் விருது சங்ககராவிற்கு வழங்கப்பட்டது. இந்த வெற்றி மூலம் ’ஏ’ பிரிவில் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்