இங்கிலாந்தை வெள்ளையடித்து விரட்டுவோம்: அடித்து சொல்லும் கங்குலி!
வெள்ளி, 4 நவம்பர் 2016 (09:57 IST)
சமீபத்தில் நியுசிலாந்து அணி இந்தியா வந்து விளையாடி டெஸ்ட் தொடரை முழுமையாக இழந்து நாடு திரும்பியது, அதுபோல இங்கிலாந்தும் முழுமையாக டெஸ்ட் தொடரை இழக்கும் என முன்னாள் இந்திய வீரர் கங்குலி கூறியுள்ளார்.
நியூசிலாந்து அணியுடனான டெஸ்ட் தொடரை கோலி தலைமையிலான இந்திய அணி முழுமையாக கைப்பற்றி சாதனை படைத்தது. இந்நிலையில் அடுத்ததாக இங்கிலாந்து அணி இந்தியா வர உள்ளது. அந்த அணி இந்தியாவுடன் 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது.
இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பெங்கால் கிரிக்கெட் வாரியத்தின் தலைவரும், முன்னாள் இந்திய அணியின் கேப்டனுமான சவுரவ் கங்குலி, நியூசிலாந்துடனான டெஸ்ட் தொடரை முழுமையாக கைப்பற்றிய அதே துடிப்புடன் இந்திய அணி வீரர்கள் தற்போது உள்ளனர்.
இந்நிலையில் இங்கிலாந்து அணியுடனான டெஸ்ட் தொடரையும் இந்தியா முழுமையாக கைப்பற்றி இங்கிலாந்தை ஒயிட் வாஷ் செய்யும் என கூறியுள்ளார்.