2007 உலக கோப்பை தோல்விக்கு இவர்தான் காரணம்: மனம்திறந்த சச்சின்

Webdunia
சனி, 27 மே 2017 (18:54 IST)
2007 ஆம் ஆண்டு நடைப்பெற்ற உலக கோப்பை போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்த காரணம் குறித்து சச்சின் முதல்முறையாக மனம் திறந்து கூறியுள்ளார்.


 

 
உலக கோப்பை போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த இந்திய அணி 2007 ஆம் ஆண்டு நடைப்பெற்ற உலக கோப்பை போட்டியில் லீக் சுற்றோடு மோசமான தோல்வியை சந்தித்து வெளியேறியது. இந்த தோல்விக்கான காரணத்தை சச்சின் தற்போது தெரிவித்துள்ளார். 
 
சச்சின் எ பில்லியன் ட்ரீம்ஸ் என்ற பெயரில் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் வாழ்க்கை வரலாறு குறித்த படம் வெளியாகியுள்ளது. இதில், சச்சின் 2007 ஆம் ஆண்டு நடத்த உலக கோப்பை போட்டியில் தோல்வி அடைந்ததற்கு காரணம் அப்போது இருந்த அணியின் பயிற்சியாளர் கிரேக் செப்பல் என்று கூறியுள்ளார்.
 
உலக கோப்பை தொடருக்கு ஒரு மாதம் முன்பாக அணியின் பயிற்சியாளர் கிரேக் செப்பல் ஒரு சில மாற்றங்களை கொண்டு வந்தார். அந்த மாற்றங்கள் வெகுவாக பாதித்தது. இதுதொடர்பாக பிசிசிஐ நிர்வாகத்திடம் தெளிவாக எடுத்து கூறினேன், என்று தெரிவித்துள்ளார்.
அடுத்த கட்டுரையில்