ஐபிஎல் தொடரில் நேற்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி சூர்யகுமாரின் அதிரடி ஆட்டத்தால் 218 ரன்களை சேர்த்தது. சூர்யகுமார் யாதவ் 48 பந்துகளில் அதிரடியாக விளையாடி 103 ரன்கள் சேர்த்தார். ஐபிஎல் போட்டிகளில் இது அவரின் முதல் சதமாகும்.
மிஸ்டர் 360 டிகிரி என அழைக்கப்படும் சூர்யகுமார் யாதவ், நேற்றும் மைதானத்தின் பல பக்கங்களிலும் சிக்ஸர்களை பறக்க விட்டார். அதில் குறிப்பாக ஷமி வீசிய பந்தை கட்ஷாட் ஆடி, அந்த பந்து எட்ஜ் ஆகி தேர்ட் மேன் திசையில் ஒரு அபாரமான சிக்ஸரை அடித்தார். அந்த ஷாட்டைப் பார்த்து மைதானமே ஆர்ப்பரித்து கரகோஷம் எழுபியது.
இந்த ஷாட்டைப் பார்த்த பெவிலியனில் இருந்த மும்பை இந்தியன்ஸ் அணியின் ஆலோசகர் சச்சின் டெண்டுல்கர், தன் கைகளால் அந்த ஷாட்டை அடித்துக் காட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இது சம்மந்தமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
How do you hit a cover drive but get it over third man for six?
We watched SKY do it here and still can't understand. What about you?