ஷமிக்குக் கடைசி ஓவரைக் கொடுத்தது ஏன்? கேப்டன் ரோஹித் பதில்!

திங்கள், 17 அக்டோபர் 2022 (15:08 IST)
இன்றைய பயிற்சி ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 186 ரன்கள் எடுத்திருந்தது. சூர்யகுமார் யாதவ் 50 ரன்களும் கேஎல் ராகுல் 57 ரன்கள் எடுத்திருந்தனர். இந்த நிலையில் 187 என்ற இலக்கை நோக்கி விளையாடிய ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்களில் 180 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனால் இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

ஆஸ்திரேலியா அணி 19 ஓவர் முடிவில் 176 ரன்கள் எடுத்திருந்த நிலையில் வெற்றி பெற 11 ரன்கள் மட்டுமே தேவையாக இருந்தது. ஆனால் முகமது ஷமி கடைசி ஓவரில் 4 பந்துகளில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார்.

இந்நிலையில் ஆடும் லெவனில் இல்லாத ஷமியை அழைத்து ரோஹித் ஷர்மா பந்து வீச அழைத்தற்கு கை மேல் பலன் கிடைத்தது. இதுகுறித்து பேசிய ரோஹித் “கடந்த ஒரு ஆண்டாக அவர் டி 20 போட்டிகளில் விளயாடவில்லை. அதனால் அவருக்கு கடைசி ஓவர் கொடுத்தால் சவாலானதாக இருக்கும் என்பதால் அந்த முடிவை எடுத்தேன்” எனக் கூறியுள்ளார். 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்