தற்போது 13 பாயிண்டுகளுடன் தரவரிசையில் இரண்டாவது இடத்தில் உள்ள சென்னை அணி 16 என்ற கட் ஆஃப் பாயிண்டுகளை தாண்ட இனிவரும் 3 மேட்ச்சுகளில் இரண்டு மேட்ச்சுகளிலாவது வெற்றி பெற வேண்டும். ராயல் சேலஞ்சர்ஸ், பஞ்சாப் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் ஆகிய மூன்று அணிகளும் அடுத்த 4 போட்டிகளில் 3 போட்டியாவது வெற்றி பெற வேண்டும்.
லக்னோ மற்றும் ராஜஸ்தான் அணிகள் அடுத்து வரும் 3 போட்டிகளையுமே வெற்றி பெற வேண்டும். அதுபோல சன்ரைசர்ஸ், டெல்லி அணிகள் தங்களுக்கு மீதமுள்ள 4 போட்டிகளிலும் வெற்றி பெற்றால் மேலே உள்ள அணிகளை பாயிண்ட்ஸ் டேபிளில் கீழே இறக்கி ப்ளே ஆப் செல்ல வாய்ப்பு கிடைக்கலாம்.
ஆனால் திடீரென தற்போது ஃபார்முக்கு வந்துள்ள சன்ரைஸர்ஸ் அணியும், டெல்லி அணியும் தரவரிசையில் நடுவில் உள்ள அணிகளுக்கு பெரும் பிரச்சினையாக அமைய போகின்றன என்பது தெரிகிறது. கடந்த 2 போட்டிகளில் டெல்லி தொடர் வெற்றி பெற்று ஆர்சிபி, குஜராத் அணிகளை பதம் பார்த்தது. நேற்று சன்ரைஸர்ஸ் அணி கடைசி பந்தில் வெற்றி பெற்று ராஜஸ்தானுக்கு ஆப்பு வைத்தது. இதை வைத்து பார்க்கும்போது கடைசி லீக் போட்டிகள் மேலும் கூடுதல் பரபரப்புடன் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.