பாகிஸ்தான் வீரர் மிஸ்பா உல்-ஹக்கின் கார் பறிமுதல்

வியாழன், 4 ஜூன் 2015 (19:22 IST)
பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் மிஸ்பா உல்-ஹக் தனது காருக்கான வரியை செலுத்தாததால் அவரிடைய கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
 

 
பாகிஸ்தான் அணிக்கு நீண்ட காலமாக கேப்டனாக பணியாற்றியவர் மிஸ்பா உல்-ஹக். அவர் 51 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி [8 சதங்கள், 26 அரைச்சதங்கள்] 3,658 ரன்கள் எடுத்துள்ளார். 162 ஒருநாள் போட்டிகளில் விளையாடி [42 அரைச்சதங்கள்] 5,122 ரன்கள் குவித்துள்ளார். அதோடு 39 டி-20 போட்டிகளில் விளையாடி [3 அரைச்சதங்கள்] 788 ரன்கள் எடுத்துள்ளார்.
 
இந்நிலையில், இவர் விலை உயர்ந்த கார் ஒன்றை வாங்கியுள்ளார். ஆனால், அந்த காருக்கு செலுத்த வேண்டிய ரூ.30 லட்சத்து 90 ஆயிரம் வரியை செலுத்தாமல் காலம் கடத்தி வந்துள்ளார். வரி செலுத்தாததால் மிஸ்பாவின் விலை உயர்ந்த காரை அந்நாட்டு வருவாய்த் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து உள்ளனர்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்