தோனியை விரட்டு விரட்டு என விரட்டிய கல்லூரி மாணவி: எதற்கு தெரியுமா?

சனி, 5 நவம்பர் 2016 (11:59 IST)
ஹம்மர் காரில் சென்ற இந்திய அணியின் கேப்டன் தோனியை கல்லூரி மாணவி ஒருவர் அவரது ஸ்கூட்டியில் விமானநிலையம் வரை விரட்டி சென்று செல்ஃபி எடுத்த சம்பவம் பரபரப்பாக பேசப்படுகிறது. அந்த செல்ஃபி புகைப்படமும் வைரலாக பரவி வருகிறது.


 
 
சில தினங்களுக்கு முன்னர் ராஞ்சியில் நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கு எதிரான 4-வது ஒரு நாள் போட்டிக்கு பின்னர் கேப்டன் தோனி அவரது ஹம்மர் காரில் மைதானத்தில் இருந்து விசாகப்பட்டினம் செல்ல ராஞ்சி விமான நிலையத்துக்கு வந்தார்.
 
அப்போது விமான நிலையம் செல்ல தோனி காரில் செல்வதை பார்த்த ஆராத்யா என்ற கல்லூரி மாணவி அவருடன் செல்ஃபி எடுக்க தனது ஸ்கூட்டியில் விரட்டி சென்றுள்ளார். விரட்டி சென்று விமான நிலையத்தில் தோனியை மடக்கிய மாணவி தன்னுடன் செல்ஃபி எடுக்க தோனியை வற்புறுத்தியுள்ளார்.
 
பின்னர் தோனியுடன் செல்ஃபி எடுத்துக்கொண்ட அந்த கல்லூரி மாணவி அந்த புகைப்படத்தை தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் தறபோது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்