ஷேவாக்குடன் மீண்டும் சேர்ந்து விளையாட போகும் தோனி

புதன், 2 செப்டம்பர் 2015 (15:22 IST)
இந்திய அணியின் முன்னாள் அதிரடி வீரர் வீரேந்திர ஷேவாக்கும், மகேந்திர சிங் தோனியும் தொண்டு நிறுவனம் ஒன்று நடத்தவுள்ள போட்டியில் இணைந்து விளையாட உள்ளனர்.
 

 
உடல் ஊனமுற்றவர்களுக்கு உதவிடம் நோக்கத்தில் இருபது ஓவர் கிரிக்கெட் போட்டி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தொண்டு நிறுவனம் ஒன்று இந்த கிரிக்கெட் போட்டியை நடத்த உள்ளது. செப்டம்பர் 17 ஆம் தேதி கியா ஓவல் மைதானத்தில் நடைபெறும் இதில், மகேந்திர சிங் தோனி மற்றும் முன்னாள் நட்சத்திர வீரர் விரேந்திர சேவாக் இருவரும் மற்ற நாட்டு வீரர்களுடன் இணைந்து விளையாட உள்ளனர்.
 
இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் இயான் போத்தம் நிர்வகிக்கும் Help for Heroes XI என்ற இந்த அணிக்கு இங்கிலாந்து வீரர் ஆண்ட்ரூ ஸ்ட்ராஸ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அணியில் தோனி, ஷேவாக், ஷாகித் அஃப்ரிடி, ஹெர்ஷல் கிப்ஸ் ஆகிய முன்னனி வீரர்கள் இணைந்து விளையாட உள்ளனர்.
 
இவர்கள் சுனில் கவாஸ்கரால் நிர்வகிக்கப்படும் Rest of the World XI என்ற அணியுடன் மோத உள்ளனர், இந்த அணியில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஜாம்பவான் லாரா, பிரண்டன் மெக்குல்லம், மேத்யூ ஹைடன், மஹிலா ஜெயவர்தனே மற்றும் க்ரீம் ஸ்மித் ஆகிய ஜாம்பவான்கள் இணைந்து விளையாட உள்ளனர்.
 
 
இது குறித்து மகேந்திர சிங் தோனி கூறுகையில், “கியா ஓவல் மைதானத்தில் பல கிரிக்கெட் சூப்பர் ஸ்டார்களுடன் ஒரு நல்ல நோக்கத்திற்காக இணைந்து விளையாடுவதில் நான் மகிழ்சி அடைகிறேன்” என தெரிவித்துள்ளார்.
 
மேலும் ’நான் எப்பொழுதும் இங்கிலாந்தில் விளையடுவதை விரும்புவேன் என்றும் அனைவரும் எங்கள் அணிக்கு ஆதரவு தாருங்கள். இந்த போட்டியில் உலகத் தரமான ஆட்டத்தை பார்க்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்