ஜான்சனின் இமாலய சிக்ஸர் - வர்ணனையாளர் அறை கண்ணாடி உடைந்தது

புதன், 27 ஆகஸ்ட் 2014 (14:34 IST)
ஜிம்பாப்வே, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகள் பங்கேற்கும் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது.
இதில் ஜிம்பாப்வே, ஆஸ்திரேலியா இடையேயானா முதல் ஆட்டம், ஹராரேவில் 2014 ஆகஸ்டு 25 அன்று நடந்தது. 
 
இப்போட்டியில் 49ஆவது ஓவரின் மூன்றாவது பந்தை ஜிம்பாப்வே அணியின் பன்யங்கரா (Tinashe Panyangara) வீசினார். இப்பந்தை ஆஸ்திரேலியாவின் மிட்சல் ஜான்சன் (Mitchell Johnson) சந்தித்தார். இப்பந்தை எதிர்கொண்ட ஜான்சன், இமாலய சிக்சர் அடித்தார். பந்து நேராக வர்ணனையாளர்கள் உட்கார்ந்திருந்த அறையை நோக்கிச் சென்று, அங்கிருந்த கண்ணாடியை உடைத்தது.
 
இந்தச் சம்பவத்தால் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
 
இதனால் வர்ணனை செய்து கொண்டிருந்த நீல் மான்த்ராப் மற்றும் பேங்க்வா ஆகியோர் அதிர்ச்சி அடைந்தனர். உடைந்த கண்ணாடித் துகள்களை வர்ணனையாளர்கள் மேஜையிலிருந்து சிரித்துக்கொண்டே அப்புறப்படுத்தினார்.
 
ஜான்சனைப் போலவே வெஸ்ட் இண்டீஸின் நட்சத்திர வீரரான கிரிஸ் கெய்லும்  சிக்ஸர் அடித்து கண்ணாடியை உடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. 
 
இப்போட்டியில் ஆஸ்திரேலிய அணி 198 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்