ராகுல் டிராவிட்டை முந்துவாரா கேப்டன் தோனி?

வெள்ளி, 17 அக்டோபர் 2014 (14:30 IST)
இன்னும் 6 ரன்கள் எடுக்கும் பட்சத்தில் இந்திய அணி கேப்டன் மகேந்திர சிங்  தோனி உள்நாட்டுப் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர்களில் 2 ஆவது இடத்தைப் பிடிப்பார்.
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையிலான நான்காவது ஒருநாள் தொடர், இன்று தர்மசேலாவில் நடைபெற இருக்கிறது. இன்றையப் போட்டிகளில் தோனி மேற்கொண்டு 6 ரன்கள் எடுக்கும் நிலையில் உள்நாட்டில் அதிகமாக ரன் குவித்தவர் பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ள ராகுல் டிராவிட்டை பின்னுக்கு தள்ளிவிடுவார்.
 
ஒட்டுமொத்தமாக சச்சின் டெண்டுல்கர்  6976 ரன்கள் குவித்து முதலிடத்தில் உள்ளார். ராகுல் திராவிட் 3406 ரன்கள் குவித்து 2 ஆவது இடத்தில் உள்ளார்.
 
இன்று நடைபெறும் போட்டி தோனிக்கு 250 ஆவது போட்டி என்பது குறிப்பிடத்தக்கது. அதிகப் போட்டிகளில் விளையாடியுள்ள விக்கெட் கீப்பர்களின் பட்டியலிலும் டோனி 4 ஆவது இடத்தைப் பிடித்துள்ளார். சங்ககரா (336), மார்க் பவுச்சர் (294), ஆடம் கில்கிறிஸ்ட் (282) ஆகியோருக்கு அடுத்தப்படியாக தோனி உள்ளார்.
 
இன்றைய போட்டியில் அரைச்சதம் அடிக்கும் பட்சத்தில், உள்நாட்டுப் போட்டிகளில் 20 அல்லது 20 க்கும் மேற்பட்ட அரைச்சதங்கள் அடித்த கேப்டன்களின் வரிசையில் தோனி 3 ஆவது இடத்தைப் பிடிப்பார். ஏற்கனவே ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங் (25), தென் ஆப்பிரிக்காவின் கிரீம் ஸ்மித் (23) ஆகியோர் முதல் இரண்டு இடங்களைப் பிடித்துள்ளனர். தோனி இதுவரை 19 அரைச்சதங்கள் அடித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்