ஐபிஎல் ஏலத்தில் புறக்கணிக்கப்பட்ட முன்னணி வீரர்கள்

சனி, 6 பிப்ரவரி 2016 (21:50 IST)
ஐபிஎல் சீசன் 9-இல் விளையாடும் வீரர்களுக்கான ஏலம் பெங்களூரில் இன்று நடைபெற்றது. 351 வீரர்கள் இந்த ஏலத்தில் பரிசீலிக்கப்பட்டனர். இதில் 94 வீரர்களை அணிகள் ஏலத்தில் எடுத்தன.


 
 
இந்த ஏலத்தில் பல முன்னணி வீரர்களை அணி உரிமையாளர்கள் ஏலத்தில் எடுக்க முன்வரவில்லை. ஐபிஎல் ஏலத்தை பொறுத்தவரையில், பல அடையாளம் தெரியாத வீரர்கள் அடையாளம் காணப்பட்டு, நல்ல தொகைக்கு ஏலம் எடுக்கப்படுவார்கள். ஆனல் அதே சமயம் பல நட்சத்திர வீரர்கள் கண்டுகொள்ளப்படாமல் விடுபடுவார்கள்.
 
அதே போல் இந்த வருடம் நடந்த ஐபிஎல் ஏலத்திலும் பல ஜாம்பவன்கள் கண்டுகொள்ளப்படவில்லை.
 
பல ஐபில் போட்டிகளில் கலக்கிய ஆஸ்திரேலியாவின் மைக் ஹஸி, ஆரோன் ஃபின்ச், ஜார்ஜ் பெய்லி, பிராட் ஹடின், கேமரூன் வைட், பேட்டின்சன், டேவிட் ஹஸி ஆகிய ஆஸ்திரேலிய வீரர்கள் ஏலம் எடுக்கப்படவில்லை.
 
தில்சான், ஜெயவர்தனே, அஜந்தா மெண்டீஸ், ஜீவன் மெண்டீஸ், திசைரா பெரேரா போன்ற இலங்கை வீரர்கள், ஓவைஷ் ஷா, ரவி பொபாரா, டேரன் பிரேவோ, பிடல் எட்வர்ட்ஸ், பீட்டர்சன், தமிம் இக்பால், சாமுவல்ஸ் போன்ற வீரர்களும் இந்த இந்த ஏலத்தில் போகவில்லை.
 
பத்ரிநாத், ஓஜா, முனாஃப் பட்டேல், மனோஜ் திவாரி, அசோக் திண்டா போன்ற இந்திய வீரர்கள் உட்பட மேலும் பல வீரர்கள் இந்த ஏலத்தில் போனியாகவில்லை.

வெப்துனியாவைப் படிக்கவும்