இந்நிலையில், இந்தியா - இங்கிலாந்து இடையேயான போட்டியின் போது அவர் சற்று தடுமாற்றத்துடன் ஆடியதால், அவர் மீது மீண்டும் விமர்சனங்கள் எழுந்தது. இந்நிலையில், இந்திய அணி கேப்டன் கோலி இதற்கு பதிலடி கொடுத்துள்ளார்.
கோலி கூறியதாவது, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் இருந்து தோனியின் பேட்டிங் திறமை குறித்த கேள்விகள் எழுந்து வருகிறது. அவரின் பேட்டிங் வரிசை 7 அல்லது 6-க்கு செல்வதன் காரணமாகவே அவரால் சிறப்பாக செயல்பட முடியவில்லை.
ரோஹித் சர்மா, தவண், கோலி, ராகுல், ரெய்னா ஆகியோருக்கு பின் 6 வது வீரராக தோனி களமிறங்குகிறார். இதில் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாடினால், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ரன் அடிக்கும் வாய்ப்பு குறைவுதான்.
ஒருவேளை டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்பினால், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் நெருக்கடியை சமாளித்து பேட் செய்ய வேண்டி உள்ளது. ஏதாவது ஒரு போட்டியில் விளையாடாத தோனியின் பேட்டிங்கை விமர்சிப்பதும், கேள்விக்கு உள்ளாக்குவதும் நியாயமில்லை என்று கோலி பதிலடி கொடுத்துள்ளார்.