இந்த நிலையில் 2023 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டியில் பங்கேற்கும் 10 அணிகளும் தக்கவைத்துக்கொள்ளும் வீரர்கள் மற்றும் விடுவிக்கும் வீரர்களின் பெயர்களை நேற்று மாலை அறிவித்தன. இதில் அதிகளவு வீரர்களை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி விடுவித்துள்ளது. மொத்தம் 16 வீரர்களை அந்த அணி விடுவித்துள்ளது. ஆனாலும் அந்த அணியிடம் மீதமுள்ள தொகை 8 கோடிக்குள்தான் உள்ளது.
கொல்கத்தா அணி விடுவித்த வீரர்கள்
பேட் கம்மின்ஸ், சாம் பில்லிங்ஸ், அமன் கான், சிவம் மாவி, முகமது நபி, சம்மிகா கருணாரத்னே, ஆரோன் பின்ச், அலெக்ஸ் ஹேல்ஸ், அபிஜித் தோமர், அஜின்கியா ரஹானே, அசோக் சர்மா, பாபா இந்திரஜித், பிரதம் சிங், ரமேஷ் குமார், ராசிக் சலாம், ஷெல்டன் ஜாக்சன்.