3 ஆவது டெஸ்டில் தோல்வி: வீரர்கள் மீது கடுப்பில் கபில்தேவ்

திங்கள், 4 ஆகஸ்ட் 2014 (14:45 IST)
3 ஆவது டெஸ்டில் இந்திய வீரர்களின் மோசமான பீல்டிங்கால் தோல்வி ஏற்பட்டது என்று முன்னாள் கேப்டன் கபில்தேவ் குற்றம் சாட்டியுள்ளார்.
 
டோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. 5 டெஸ்டில் முதல் டெஸ்ட் ‘டிரா’ ஆனது. லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த 2 ஆவது டெஸ்டில் இந்தியா 95 ரன்னில் வெற்றி பெற்றது. சவுத்தம்டனில் நடந்த 3 ஆவது டெஸ்டில் இங்கிலாந்து 226 ரன்னில் வெற்றி பெற்றது. இதனால் 1 – 1 என்ற சமநிலை ஏற்பட்டது.
 
இதற்கிடையே 3 ஆவது டெஸ்டில் இந்திய வீரர்களின் மோசமான பீல்டிங்கால் தோல்வி ஏற்பட்டது என்று முன்னாள் கேப்டன் கபில்தேவ் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:–
 
இந்திய வீரர்களின் பீல்டிங் மிகவும் மோசமாக இருந்தது. கேட்ச்சுகளை தவறவிட்டதால் இங்கிலாந்து ஆதிக்கம் செலுத்தியது. கேட்ச்சுகளை தவறவிட்டால் பவுலர்களால் எப்படி விக்கெட்டுகளை வீழ்த்த முடியும். இந்த மோசமான பீல்டிங் தான் தோல்விக்கு காரணம். இனி வரும் போட்டிகளில் இதை நிவர்த்தி செய்ய வேண்டும் என்று கபில்தேவ் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்