ஒருநாள் போட்டிக்கும் விராட் கோலியை கேப்டனாக நியமிக்கலாம் : ரவிசாஸ்திரி கருத்து

புதன், 1 ஜூன் 2016 (18:10 IST)
டெஸ்ட் போட்டி மட்டுமல்ல, ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டிகளிலும் விராட் கோலியை கேப்டனாக நியமிக்கும் நேரம் வந்துவிட்டது என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் இயக்குனர் ரவி சாஸ்திரி கருத்து தெரிவித்துள்ளார்.


 

 
இதுபற்றி அவர் செய்தியாளர்களிடம் பேசும் போது “எல்லா வகையான ஆட்டங்களுக்கும் கேப்டன் பொறுப்பை ஏற்கும் நிலைக்கு விராட்கோலி வந்துவிட்டார். 
 
தேர்வு குழு தலைவராக இருந்தால் ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டிகளுக்கும் அவரை கேப்டனாக்க வேண்டும் என்றுதான் முடிவெடுத்திருப்பேன். 
 
தோனி சிறந்த வீரர் என்பதில் சந்தேகம் இல்லை. அவர் தனது விளையாட்டை எந்த வித நெருக்கடியும் இல்லாமல் அனுபவித்து விளையாட வேண்டும் என்று நினைக்கிறேன். அவரது திறைமையான ஆட்டத்தை  முழுமையாக ரசித்து பார்க்க அவரிடம் இருக்கும் கேப்டன் பதவியை எடுக்க வேண்டும். 
 
அடுத்த உலகக் கோப்பை 2019ஆம் ஆண்டில் நடக்கவுள்ளது. இடையில் பெரிய தொடர்கள் எதுவுமில்லை. எனவே விராட் கோலியை கேப்டனாக நியமித்து, உலக கோப்பைக்கு ஏற்ற வலுவான அணியான இந்திய அணியை மாற்ற இதுவே சரியான தருணம்” என்று அவர் கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்