ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் இந்தியா முதலிடம்

திங்கள், 1 செப்டம்பர் 2014 (17:54 IST)
நாட்டிங்காமில் நடைபெற்ற 3 ஆவது ஒரு நாள் போட்டியில் அபார வெற்றி பெற்றதன் மூலம் 114 புள்ளிகளுடன் ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை பட்டியலில் இந்தியா முதலிடத்தைப் பிடித்துள்ளது. 
 
இந்திய அணி இங்கிலாந்து மண்ணில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு  விளையாடி வருகிறது. இதில் டெஸ்ட் தொடரில் படுதோல்வி அடைந்தாலும், பின் ஒரு நாள் போட்டிகளில் வலுவான நிலையில் உள்ளது.
 
முதல் ஒரு நாள் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது. 2 ஆவது ஒரு நாள் போட்டி 27 ஆகஸ்ட், 2014 அன்று நடைபெற்றது. இதில் இந்திய அணி 133 ரன் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது.
 
இதைத்தொடர்ந்து 30 ஆகஸ்ட், 2014 அன்று நாட்டிங்காம் நகரில் நடந்த மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா, 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அத்துடன் 2 - 0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரில் முன்னிலை பெற்றது.
 
இந்த வெற்றியால் 114 புள்ளிகளுடன் ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் இந்தியா முதலிடத்தைப் பிடித்துள்ளது. ஜிம்பாப்வே அணியிடம் ஆஸ்திரேலியா 3 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றதால் 3 புள்ளிகளை இழந்த ஆஸ்திரேலியா 4 ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டது.
 
மேலிம் 2 ஆவது இடத்தில் தென் ஆப்பிரிக்கா 113 புள்ளிகளுடன் உள்ளது. இலங்கை 11 புள்ளிகளுடன் 3 ஆவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்