இந்திய அணி போராடி தோல்வி

புதன், 26 அக்டோபர் 2016 (21:59 IST)
இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 4ஆவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி கடுமையாக இறுதி வரை போராடி தோல்வி அடைந்தது. 


 

 
இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 4ஆவது ஒருநாள் போட்டி ராஞ்சியில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. அதன்படி முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 260 ரன்கள் எடுத்தது.
 
261 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி தொடர்ந்து தனது விக்கெட்டுகளை இழந்து வந்தது. ரகானே அரை சதம் அடித்து ஆட்டமிழந்தார்.
 
இக்கட்டான சுழலில் அணியின் வெற்றி நம்பிக்கையை ஏற்படுத்திய அக்ஸரும் ஆட்டமிழக்க, இந்திய அணியில் பந்துவீச்சாளர்கள் கடைசி வரை போராடினர். 48.4 ஓவர் முடிவில் 241 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.
 
நியூசிலாந்து இந்த ஒருநாள் போட்டி தொடரில் 2 ஆட்டங்களில் வெற்றிப் பெற்றுள்ளது. இரு அணிகளும் தலா இரண்டு போட்டிகள் வெற்றி பெற்றுள்ள நிலையில் கடைசி ஆட்டத்தில் வெற்றி பெற்று தொடரை வெல்ல இரு அணிகளும் ஆர்வத்துடன் இருக்கின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்