ஐசிசி டெஸ்ட் தரவரிசை: பந்து வீச்சில் அஸ்வின் முதலிடம்!

Webdunia
புதன், 1 மார்ச் 2023 (16:18 IST)
இந்திய சுழற்பந்து வீச்சாளர்  அஸ்வின், ஐசிசி டெஸ்ட் தரவரிசையில், பந்து வீச்சில் முதலிடம் பிடித்துள்ளார்.
 

இந்தூரில் இன்று நடைபெறும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 வது டெஸ்ட் நடந்து வருகிறது.

இந்த நிலையில், இந்திய பந்து வீச்சாளர் அஸ்வின், ஒரு நாள் மற்றும், டி-20 போட்டிகளை தவிர்த்து,  டெஸ்ட் போட்டிகளில் ஆர்வமுடல் பங்கேற்று வருகிறார்.

இக்கட்டான நேரத்திலும், எதிரணியினரின் விக்கெட் வீழ்த்துவதில் சிறப்புடன் செயல்படுகிறார். இதனால், உலகில் சிறந்த பந்து வீச்சாளராகத் திகழ்கிறார்.

இந்த நிலையில், தற்போது நடைபெற்று வரும் பார்டர் – கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் அஸ்வின் ஆஸ்திரேலியா அணிக்கு சவாலாக இருக்கிறார்.

இந்த நிலையில், ஐசிசி சர்வதேச டெஸ்ட் தரவரிசையில், 864 புள்ளிகளுடன்  அஸ்வின் முதல் இடம் பிடித்துள்ளார்.

இங்கிலாது அணியின் ஜேம்ஸ் ஆண்டர்சன் 859 புள்ளிகளுடன் 2 வது இடத்திலும், ஆஸ்திரெலிய வீரர் பேட் கம்மின்ஸ் 558 புள்ளுகளுடன் 3 வது இடம் பிடித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்