ஐசிசி தரவரிசைப் பட்டியலில் அணிகளில் ஆஸ்திரேலியாவும், பேட்ஸ்மேன்களில் டி வில்லியர்ஸ், பந்துவீச்சில் மிட்செல் ஸ்டார்க் ஆகியோரும் முதலிடம் பிடைத்துள்ளனர்.
உலகக்கோப்பை தொடருக்குப் பிறகு ஐசிசி புதிய தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. உலகக்கோப்பை தொடரில் ஐந்தாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ள ஆஸ்திரேலிய அணி, ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளுக்கான தரவரிசையில் தொடர்ந்து முதலிடத்தை தக்கவைத்துள்ளது.