வெஸ்ட் இண்டீஸ் வீரர்களை டுவிட்டரில் கலாய்த்த ஹர்பஜன் சிங்!

திங்கள், 25 ஜூலை 2016 (15:48 IST)
வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் போட்டி 4-வது நாளிலேயே முடிவு தெரிந்து விட்டது. இந்த ஆட்டத்தில் இன்னிங்ஸ் மற்றும் 92 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது இந்திய அணி.


 
 
கேப்டன் விராட் கோலி 200 ரன்கள் அடித்து தனது ரன் வேட்டையை தொடர்ந்து வருகிறார். இவரது இரட்டை சதம் இந்திய அணி வலுவான இலக்கை வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு நிர்ணயிக்க பெரிதும் உதவியது.
 
இந்நிலையில் டுவிட்டரில் விராட் கோலியின் ரன் வேட்டை குறித்து பதிவிட்ட ஹர்பஜன் சிங் வெஸ்ட் இண்டீஸ் அணியை கிண்டல் செய்யும் விதத்தில் பதிவிட்டிருந்தார்.

The only way West Indies can stop @imVkohli from scoring runs is by hiding his kitbag

வெப்துனியாவைப் படிக்கவும்