எனினும் 22 ரன்கள் எடுத்த போது வார்னர் கிளின் போல்ட் ஆனார். மிகவும் எதிர்ப்பார்க்கப்பட்ட வாட்சன் ரன் ஏதும் எடுக்காமல் அதிர்ச்சி அளித்து ஏமாற்றினார். பின் வந்த ஸ்மித்தும் 5 ரன்களில் வெளியேறினார். மறுமுனையில் பின்ச் தனது அரைசதத்தை கடந்தார். பெய்லியும் நிதான ஆட்டத்தை வெளிபடுத்தி கொண்டிருக்க பின்ச் தன் பங்கிற்கு சதத்தை எட்டினார். இது பின்ச்சின் 6 ஆவது சதமாகும்.
பின்னர் பின்ச் 135 ரன்கள் எடுத்த போது ரன் அவுட் ஆகி வெளியேறினார். மறுமுனையில் பெய்லி 55 ரன், மேக்ஸ்வெல் 66 ரன்கள் எடுக்க இறுதியில் ஆஸ்திரேலியா அணி 9 விக்கெட் இழப்பிற்கு 342 ரன்கள் எடுத்தது. கடைசி ஓவரில் இங்கிலாந்தின் ஸ்டீவன் பின், ஹாட்ரிக் சாதனை படைத்து அசத்தினார்.