பவுலராக விஸ்வரூபமெடுக்க இருக்கும் கேப்டன் தோனி!

வெள்ளி, 10 ஜூன் 2016 (18:22 IST)
இந்திய கிரிக்கெட் அணி இளம் புதிய வீரர்களுடன் கேப்டன் தோனி தலைமையில் ஜிம்பாப்வே சுற்றுப்பயணம் சென்றுள்ளது. இங்கு 3 ஒருநாள் போட்டிகள், 3 இருபது ஓவர் போட்டிகளில் விளையாட உள்ளது.


 
 
இந்த தொடரில் கேப்டன் தோனி பந்து வீசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல் ஒரு நாள் போட்டி நாளை நடைபெற உள்ள நிலையில் இந்திய வீரர்கள் இன்று பயிற்சியில் ஈடுபட்டனர்.
 
இந்த பயிற்சியில் இந்திய அணியின் கேப்டன் தோனி பவுலிங் பயிற்சி மேற்கொண்டார். அந்த வீடியோவை பிசிசிஐ தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. ஜிம்பாப்வே சுற்றுப்பயணத்தில் மற்றொரு விக்கெட் கீப்பர் கே.எல்.ராகுல் இடம் பெற்றுள்ளதால் கேப்டன் தோனி இந்த தொடரில் பந்து வீசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

#TeamIndia skipper @msdhoni bowling in the nets #ZIMvIND pic.twitter.com/KwJRcE7tDD

— BCCI (@BCCI) June 9, 2016
கேப்டன் தோனி ஏற்கனவே ஒரு நாள் போடிகளில் பந்து வீசி இருக்கிறார். 2 போட்டிகளில் பந்து வீசிய அவர் 36 பந்துகளை வீசி 31 ரன்களை விட்டுக்கொடுத்து 1 விக்கெட்டும் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

வெப்துனியாவைப் படிக்கவும்