தோனி டெஸ்ட் போட்டிகளிலிருந்து விலகுவாரா?

வியாழன், 24 ஜூலை 2014 (17:05 IST)
இங்கிலாந்து டெஸ்ட் தொடர் முடிந்த பிறகு அவர் டெஸ்டில் இருந்து விலகும் முடிவை வெளியிடுவார் என்றும் கூறப்படுகிறது.
 
இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றி கேப்டன் மகேந்திரசிங் டோனி. டெஸ்ட், ஒருநாள் போட்டி, 20 ஓவர் ஆட்டம் ஆகிய 3 நிலைகளிலும் கேப்டனாக இருந்து வருகிறார்.
 
இதில் 20 ஓவர் உலக கோப்பை மற்றும் 50 ஓவர் உலக கோப்பைளை பெற்று கொடுத்து பெருமை சேர்த்துள்ளார். 2007 ஆம் ஆண்டு 20 ஓவர் உலக கோப்பையையும், 2011 ஆம் ஆண்டு 50 ஓவர் உலக கோப்பையையும் பெற்றுக்கொடுத்தார்.
 
சமீபத்தில் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த டெஸ்டில் வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியை தேடி தந்தார். 28 ஆண்டுக்கு பிறகு அவரது தலைமையிலான அணி லார்ட்ஸ் மைதானத்தில் வெற்றி பெற்றது.
 
இதற்கிடையே 2015 ஆம் ஆண்டு உலக கோப்பையை கருத்தில் கொண்டும், 33 வயதாவதாலும் டெஸ்ட் போட்டியில் இருந்து விலக டோனி திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
 
இங்கிலாந்து டெஸ்ட் தொடர் முடிந்த பிறகு அவர் டெஸ்டில் இருந்து விலகும் முடிவை வெளியிடுவார் என்றும் கூறப்படுகிறது.
 
டோனி ஏற்கனவே டெஸ்டில் இருந்து விலக இருந்தார். கிரிக்கெட் வாரியம் கேட்டு கொண்டதால் தொடர்ந்து ஆடி வருகிறார். தற்போதைய டோனியின் நிலைக்கு கிரிக்கெட் வாரியம் அனுமதி அளிக்குமா? என்பது சந்தேகமே.

வெப்துனியாவைப் படிக்கவும்