கிறிஸ் கெய்ல் இந்தியரா? ராபின் சிங் தலைமையில் புதிய குழு

புதன், 25 பிப்ரவரி 2015 (19:56 IST)
வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி ஆட்டக்காரரான கிறிஸ் கெய்ல் இந்திய வம்சாவளியினரை சேர்ந்தவரா என்பதை கண்டறிய ராபின் சிங் தலைமையில் புதிய குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
 
நேற்று (24-02-2015) செவ்வாய் கிழமை நடைபெற்ற போட்டியில் கிறிஸ் கெய்ல் இரட்டை சதம் அடித்ததன் மூலம், உலக கோப்பை கிரிக்கெட்டில் முதல் இரட்டை சதம் அடித்து சாதனையை படைத்துள்ளார். இதனால், கிறிஸ் கெய்ல் இந்திய வம்சாவளியை சேர்ந்தவராக இருக்கலாம் என நம்பப்படுகிறது.
 

 
கிறிஸ் கெய்ல் அவரது முன்னோர்கள் இந்தியர்களே என நிரூபிக்க இந்திய கிரிக்கெட் வாரியமும், மத்திய அரசும் முனைந்துள்ளன. இதற்காக முன்னாள் கிரிக்கெட் வீரர் ராபின் சிங் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. கிறிஸ் கெய்ல் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் என்பதை நிரூபிக்கும் சான்றுகளை இந்த குழு சேகரிக்கும். 
 
இது குறித்த மற்ற விசயங்களை விவரிக்க ராபின் சிங் மறுத்துவிட்டார். கெய்லின் முன்னோர்கள் பல தலைமுறைகளுக்கு முன்பு இந்தியாவில் இருந்து பிரிட்டிஷ் கால ஆதிக்கத்தில் இருந்த மேற்கு இந்திய தீவுகளில் குடியேறியவர்கள் என ராபின் தெரிவித்துள்ளார்.
 
சதம் அடிக்கும் போது விக்கெட் விழ்த்தும் போதும் கெயில் ஆடும் நடனம் பாங்க்ரா ஒத்து இருப்பதை அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்