பரிசு தொகையை ஏற்க மறுத்த இந்திய பார்வையற்றோர் கிரிக்கெட் அணி

செவ்வாய், 21 பிப்ரவரி 2017 (18:52 IST)
பார்வையற்றவர்களுக்கான டி-20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றிப் பெற்றனர். இதற்காக இந்திய அரசு சார்பில் அறிவிக்கப்பட்ட பரிசு தொகையை ஏற்க மறுப்பு தெரிவித்துள்ளனர்.


 

 
பார்வையற்றவர்களுக்கான டி-20 உலக கோப்பை கிரிக்கெட் இந்தியாவில் நடைப்பெற்றது. இந்த உலக கோப்பை போட்டியில் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, மேற்கிந்திய தீவுகள், இங்கிலாந்து, இலங்கை, நியூசிலாந்து, வங்க தேசம், மற்றும் நேபாளம் ஆகிய நாடுகள் விளையாடியது. இதில் இந்திய அணி உலக கோப்பையை வென்று அசத்தியுள்ளது.
 
இதற்காக அவர்களுக்கு ரூ.10 லட்சம் பரிசு தொகை வழங்குவதாக, மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் விஜய் கோயல் தெரிவித்திருந்தார். ஆனால் இந்த பரிசுத் தொகையை அவர்கள் மறுத்துள்ளனர். பரிசுத் தொகை குறைவாக உள்ளது எனவும் கூறியுள்ளனர்.
 
இதுகுறித்து பார்வையற்றோர் கிரிக்கெட் அணி நிர்வாகத் தலைவர் மஹந்தேஷ் கூறியதாவது:- 
 
கடந்த முறை உலக கோப்பை வென்றபோது அணியில் இருந்த ஒவ்வொருவருக்கும் தலா ரூ.5 லட்சம் வழங்கப்பட்டது. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள தொகை அணியினருக்கு நிறைவு தரவில்லை. அதனால் பரிசுத் தொகையை ஏற்க மறுக்கிறோம், என கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்