உலகக் கோப்பை: தடுமாறியது ஆஸ்திரேலியா 151 ரன்களுக்கு ஆல் - அவுட்

சனி, 28 பிப்ரவரி 2015 (10:45 IST)
இன்றைய உலகக் கோப்பை போட்டியின் லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து அணியின் பந்து வீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் 151 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது ஆஸ்திரேலிய அணி.
இன்றைய உலகக் கோப்பை ஆட்டத்தில் ஆஸ்திரேலியா – நியூசிலாந்து அணிகள் மோதின. இரு அணிகளும் உலகக் கோப்பை தொடரில் அசத்தி கொண்டு வருவதால் இப்போட்டியில் பரபரப்பிற்கு பஞ்சமிருக்காது. இதில் முதலில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்யை தேர்வு செய்தது. 
 
இதன்படி ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் தங்கள் அணியின் இன்னிங்சை தொடங்கினர். தொடக்க வீரர்களாக ஆரோன் பின்ச் மற்றும் டேவிட் வார்னர் ஆட்டத்தை தொடங்கினர். ஆட்டம் தொடங்கிய சற்று நேரத்திலேயே பின்ச் 14 ரன்களில் போல்ட் ஆனார். பின்னர் இணைந்த வாட்சனும் வார்னரும் பொறுப்புடன் விளையாடினர். எனினும் வாட்சன் 23 ரன்னிலும், வார்னர் 34 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
 
பின் வந்த கிளார்க் 12 ரன்னிலும், ஸ்மித் 4 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர். பின் வந்த மேக்ஸ்வல், மார்ஷ் என அனைத்து வீரர்களும் பெரிதாக பிரகாசிக்காததால், ஆஸ்திரேலிய அணி நிலைகுலைந்து தடுமாறியது. இறுதியில் ஆஸ்திரேலிய அணி 32.2 ஓவரிலேயே 151 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. ஆட்டமிழந்தது. ஆஸ்திரேலிய அணியில் ஹடின் மட்டும் 43 ரன்கள் எடுத்து ஆறுதல் அளித்தார். நியூசிலாந்து அணியில் அதிகபட்சமாக போல்ட் 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். நியூசிலாந்து அணி சுலப இலக்கை நோக்கி தற்போது விளையாடி வருகின்றது.

வெப்துனியாவைப் படிக்கவும்