மொகாலி டெஸ்ட்: முன்னிலைக்காக போராடும் அஸ்வின் - ஜடேஜா

ஞாயிறு, 27 நவம்பர் 2016 (20:16 IST)
மொகாலி டெஸ்ட் போட்டியில் 2வது நாள் ஆட்டம் முடிவில் இந்தியா 6 விக்கெட் இழப்பிற்கு 271 நன்கள் எடுத்துள்ளது. முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்தை விட முன்ன்னிலை வகிக்க களத்தில் அஸ்வின் - ஜடேஜா ஜோடி போராடி வருகிறது.


 

 
இன்று 2வது நாள் ஆட்டத்தில் தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து அணி 15 ரன்கள் குவித்து 283 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. பின்னர் முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி வரிசையாக விக்கெட்டுகளை இழந்தது.
 
பார்தீவ் பட்டேல் 42 ரன்களும், புஜாரா 51 ரன்களும், கோலி 62 ரன்களும் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தனர். 7 வீரராக களம் இறங்கிய அஸ்வின் அரை சதம் அடித்து அணியை ரன்களை உயர்த்தினார். 2வது நாள் ஆட்ட முடிவில் இந்தியா 6 விக்கெட் இழப்பிற்கு 271 நன்கள் எடுத்துள்ளது. முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்தை விட முன்ன்னிலை வகிக்க களத்தில் அஸ்வின் - ஜடேஜா ஜோடி போராடி வருகிறது.
 
தற்போது இங்கிலாந்தை விட 12 ரன்கள் பின்தங்கிய நிலையில் உள்ளது. இங்கிலாந்தை விட குறைந்தது 50 ரன்களாவது முன்னிலை வகித்தால் மட்டுமே, இங்கிலாந்துக்கு அணிக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும்.

வெப்துனியாவைப் படிக்கவும்