இந்தியாவிற்கு ராஜ மரியாதை? அப்போ நாங்கலாம் என்ன..

Webdunia
வெள்ளி, 28 செப்டம்பர் 2018 (17:18 IST)
ஆசியக் கோப்பை போட்டி இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. இன்று இந்தியா - வங்கதேச அணிகள் மோதவுள்ளது. இந்நிலையில், ஆசிய கிரிக்கெட் கவுன்சில் இந்தியாவிற்கு மட்டும் சலுகை வழங்குவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 
 
அதாவது, பணம் உள்ள அணிகளுக்கு அவர்கள் கேட்கும் வசதியை கொடுப்பது, அவர்கள் கேட்கும் மைதானம், அவர்கள் கேட்கும் நடுவர்கள், அவர்கள் கேட்கும் வர்ணனையாளர்கள், அவர்கள் கேட்கும் பிட்ச் உள்ளிட்டவை வழங்கபப்டுகிறதாம். 
 
ஆனால், பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான், ஹாங்காங், இலங்கை போன்றவைகளுக்கு அலைக்கழிப்பு நடந்துள்ளது. குறிப்பாக இந்திய அணிக்கு மட்டும் அனைத்து போட்டிகளும் துபாயில். 
 
டிக்கெட் விற்பனையை அதிகரிப்பதற்காக இந்திய போட்டிகள் அனைத்தும் துபாயில் நடக்க வேண்டும் என்று பிசிசிஐ நிபந்தனை விதித்ததாகவும் ஊடங்களில் செய்தி வெளியானது. 
 
பிசிசிஐ பரிந்துறைக்கும் இந்திய அணிக்கு ஒரு வசதி, மற்ற அணிகளுக்கு ஒரு வசதி என பாகுபாடோடு செயல்படுவது நிச்சயம் விசாரணைக்கு கொண்டுசெல்ல வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்