நியூசிலாந்து மற்றும் தென் ஆப்பரிக்கா அகிய அணிகள் இடையே ஒருநாள் போட்டி தொடர் நடந்து வருகிறது. 3வது ஒருநாள் போட்டியில் டிவிலியர்ஸ் 85 ரன்கள் குவித்தார். இதன்மூலம் 228 இன்னிங்ஸ்களில் 9000 ரன்களை கடந்தார். சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 9,000 ரன்களைக் கடந்து தென் ஆப்பிரிக்க வீரர் டிவிலியர்ஸ் உலக சாதனை படைத்தார்.