2ஆவது டெஸ்ட் போட்டி - ஸ்மித், ஜான்சன் அதிரடி; இந்தியா 1/71

வெள்ளி, 19 டிசம்பர் 2014 (15:06 IST)
பிரிஸ்பேனில் நடந்து வரும் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலானா 2ஆவது டெஸ்ட் போட்டி ஆஸ்திரேலியா அணி தனது முதல் இன்னிங்ஸில்ஸ்மித், ஜான்சன் அதிரடியால் 505 ரன்கள் குவித்தது. இந்திய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 71 ரன்கள் எடுத்துள்ளது.
 
இந்திய அணி தனது முதல் இன்னிங்க்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 408 ரன்கள் எடுத்திருந்தது. முரளி விஜய் 144 ரன்களும், ரஹானே 81 ரன்களும் எடுத்திருந்தனர். பின்னர் தனது முதல் இன்னிங்க்ஸை விளையாடிய ஆஸ்திரேலிய அணி நேற்றைய 2ஆம் நாள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 221 ரன் எடுத்து இருந்தது.
 

 
இன்று தொடர்ந்த 3ஆம் நாள் ஆட்டத்தில், மிட்செல் மார்ஷ் (11) ரன்களிலும், ஹாடின் 6 ரன்களிலும் அவுட் ஆகினர். தொடர்ந்து ஆடிய ஸ்மித் தனது 6ஆவது சத்தத்தை நிறைவு செய்தார். அதனை தொடர்ந்து மிட்சல் ஜான்சன் 37 பந்துகளில் அரை சதம் அடித்தார்.
 
இறுதியாக ஆஸ்திரேலியா அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 505 ரன்கள் எடுத்தது. இது இந்தியா முதல் இன்னிங்க்ஸில் எடுத்த ரன்களை விட 97 ரன்கள் அதிகமாகும்.
 
பின்னர், தனது 2ஆவது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணியில், முரளி விஜய் 27 ரன்கள் எடுத்து வெளியேறினார். மூன்றாவது நாள் ஆட்ட நேர இறுதியில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 71 ரன்கள் எடுத்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்