‌சி‌ட்‌னி டெஸ்ட்: ஆஸ்‌ட்ரேலியா 128/3

திங்கள், 3 ஜனவரி 2011 (11:06 IST)
இ‌ங்‌கிலா‌ந்து அ‌ணி‌க்கு எ‌திரான ஆஷ‌ஸ் டெ‌ஸ்‌ட் தொட‌ரி‌ன் கடை‌சி போ‌ட்டி‌யி‌ல் ஆ‌ஸ்‌ட்ரே‌லியா அ‌ணி 3 ‌வி‌‌க்கெ‌ட்டுகளை இழ‌ந்து 128 ர‌ன்க‌ள் எடு‌த்து‌ள்ளது.

இரு அ‌ணிகளு‌க்கு இடையே ஆஷஸ் தொடரின் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் இன்று நடந்து வருகிறது.

பூவா தலையா வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்‌ட்ரேலிய அணி‌யி‌ன் தொட‌க்க ‌வீர‌ர் ஹ‌க்‌கீ‌ஸ் 31 ர‌ன்‌னி‌ல் ஆ‌ட்ட‌ம் இழ‌ந்தா‌ர். ம‌ற்றொரு தொட‌க்க ‌வீர‌ர் வா‌ட்ச‌ன் 45 ர‌ன்‌னி‌ல் வெ‌ளியே‌‌றினா‌ர். ‌பி‌ன்ன‌ர் வ‌ந்த ‌மை‌க்கே‌ல் ‌கிளா‌ர்‌க் 4 ர‌ன்‌னி‌ல் ஆ‌ட்ட‌ம் இழ‌ந்தா‌ர்.

த‌ற்போது ஆ‌ஸ்‌ட்ரே‌லியா அ‌ணி 3 ‌வி‌க்கெ‌ட்டுகளை இழ‌ந்து 128 ர‌ன்க‌ள் எடு‌த்து‌ள்ளது. உஸ்மான் காவாஜா 37 ரன்களுடனும், ஹ‌‌ஸ்‌சி 6 ர‌ன்‌னிலு‌‌ம் ‌விளையாடி கொ‌ண்டிரு‌க்‌கி‌‌ன்றன‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்