மீண்டும் பந்து வீச்சு சொதப்பல்! நியுசீலாந்து 303 ரன்கள் குவிப்பு!

வெள்ளி, 31 ஜனவரி 2014 (10:23 IST)
வெலிங்டனில் நடைபெற்று வரும் நியூசிலாந்து இந்தியா அணிகள் மோதும் கடைசி ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா நியூசீலாந்தை முதலில் பேட் செய்ய அழைத்தது மீண்டும் டெய்லர் சதம் அடிக்க கேன் வில்லியம்சன் தொடர்ச்சியாக 5வது அரைசதம் எடுக்க பந்து வீச்சு மீண்டும் சொதப்பலாக அமைய நியூசீலாந்து 50 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 303 ரன்கள் எடுத்தது.
FILE

முதல் 5 ஓவர்களில் 3 மைடன்களுடன் 11 ரன்கள் கொடுத்து சிறப்பாக வீசிய மொகமட் ஷமி கடைசி 5 ஓவர்களில் 50 ரன்களை விட்டுக் கொடுத்து ஒரேயொரு விக்கெட்டை மட்டும் கைப்பற்றினார். புவனேஷ் குமாரும் ஓவருக்கு 6 ரன்கள் கொடுத்தார்.

துவக்கத்தில் இந்திய பவுலர்கள் சிறப்பாக வீசினர் முதல் ஓவரில் பவுண்டரி இல்லாத முதல் மேட்ச் ஆக இது இருந்தது. உண்மையில் 32வது பந்தில்தான் ரிஸ்கான முதல் பவுண்டரி வந்தது நியூசீலாந்துக்கு. ஷமி முதல் 2 ஓவர்கள் மைடன் வீசினார் முதல் ரன்னையே 3வது ஓவரின் 5வது பந்தில்தான் கொடுத்தார் அதுவும் ரைடரின் எட்ஜ். ஷமிக்கு தோனி நல்ல கள வியூகம் அமைத்தார். 7 பேரை ஆஃப் ஸைடில் நிறுத்தினார் ஷமியும் நல்ல துல்லியமாக வீசினார்.

புவனேஷ் குமாரும் நன்றாக வீசி ரைடரின் எட்ஜைப் பிடித்து வெளியேற்றினார். மார்டின் கப்தில் அறுவையாகிப்போனார் 20 பந்துகளில் 2 ரன்கள் எடுத்து திணறி வந்தார். வருண் ஆரோன் அவருக்கு 10வது ஓவரில் கேட்ச் விட்டார். ஆனால் 13வது ஓவரில் அவரே கப்திலை வீழ்த்தி பரிகாரம் தேடிக் கொண்டார்.
FILE

41/2 என்ற நிலையிலிருந்து டெய்லர், கேன் வில்லியம்ஸ் இணைந்து 25வது ஓவர் முடிவில் ஸ்கோரை 120 ரன்களுக்கு உயர்த்தினர். அஷ்வினுக்கு வழக்கம் போல் ஒன்றும் எடுக்கவில்லை. ஒவ்வொரு முறையும் கேன் வில்லியம்சன் அவரை மேலேறி வந்து அடித்து வெறுப்பேற்றினார். ஷமி, புவனேஷ் துவக்கத்தை வருண் ஆரோன் வேஸ்ட் செய்து ரன்களை லீக் செய்தார். டெய்லரும் தன்னுடைய பார்மை தொடர்தார்.

41/2 இலிருந்து 25 ஓவர்களில் டெய்லரும், வில்லியம்சனும் இணைந்து ஸ்கோரை 38வது ஓவரிலேயே 193 ரன்களுக்கு உயர்த்தினர். 8 பவுண்டரி ஒரு சிக்சர்டுஅன் 91 பந்துகளில் 88 எடுத்த கேன் வில்லியம்சன் மீண்டும் சத வாய்ப்பை தவறவிட்டார். ஆரோன் பந்தை ரஹானேயிடம் கேட்ச் கொடுத்தார். அது ஒரு நல்ல கேட்ச். பவர் பிளேயில் பாயிண்ட் தலைக்குமேல் அவர் அடிக்கப் போனார் ஆனால் ரஹானே எம்பிப்பிடித்தார் கேட்சை.

பிறகு டெய்லர் டிரைவ், புல், கட், ஸ்லாக் ஸ்வீப் என்று தனது 10வது சதத்தை எடுத்து 102 ரன்களில் 48வது ஓவர் ஷமி பந்தில் காலியானார். முன்னதாக மெக்கல்லம் அதிரடி 23 ரன்களுடன் கோலியின் பந்தில் ரோகித் சர்மா எம்பிப் பிடித்த கேட்சில் வெளியேறினார்.
FILE

மீண்டும் கடைசியில் இடது கை ஆல்ரவுண்டர் ஜேம்ஸ் நீஷம் 19 பந்துகளில் 3 பவுண்டரி 2 சிக்சர்களுடன் 34 நாட் அவுட். ஷமியை கடைசி ஓவரில் வெளுத்தார். ரான்க்கி 5 பந்துகளில் 11 ரன்கள்.

303/5 என்ற நியுசீலாந்தின் இலக்கை இந்தியா இன்னும் சிறிது நேரத்தில் துரத்தக் களமிறங்குகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்