பெர்த்: இந்தியா 125/2

புதன், 16 ஜனவரி 2008 (11:53 IST)
பெர்த் டெஸ்ட் முதல் நாள் ஆட்டத்தில் உணவு இடைவேளைக்குப்பிறகான ஒரு மணிநேர ஆட்டத்தில் இந்தியா தனது ரன் எண்ணிக்கையை 2 விக்கெட் இழப்பிற்கு 125 ரன்களாக உயர்த்தியுள்ளது.

சச்சின் மற்றும் திராவிட் ஆகியோர் இணைந்து இதுவரை 3வது விக்கெட்டுக்காக 61 ரன்களைச் சேர்த்துள்ளனர். ராகுல் திராவிட் ஸ்லிப் திசையில் கொடுத்த கேட்ச்சை மைக்கேல் கிளார்க் தட்டித் தட்டி பிறகு கீழே ‌விட்டார். இதைத் தவிர அச்சுறுத்தும் விதமாக எதுவும் இல்லை.

மேலும் ராகுல் திராவிட் 3ம் நிலையில் களமிறங்கியுள்ளதால், அவரது உடல் மொழி தன்னம்பிக்கையுடன் உள்ளது. ஸ்ட்ரெய்ட் டிரைவ், கவர் டிரைவ் மற்றும் ஃபிளிக் ஆகிய ஷாட்களில் 4 அழகான பவுண்டரியை அடித்து ஆடி வருகிறார்.

மறு முனையில் சச்சின் அடித்து ஆடும் நோக்கத்துடன் களமிறங்கியுள்ளார் என்று தெரிகிறது. ஷான் டெய்ட், லீ ஆகியோர் பந்து வீச்சை அவர் அடித்து ஆடி வருகிறார்.

இதுவரை 6 பவுண்டரிகளை அடித்துள்ள சச்சின் 38 ரன்களுடனும், திராவிட் 26 ரன்களுடனும் ஆடி வருகின்றனர்.

லீ 11 ஓவர்களில் 47 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை கைப்பற்றியுள்ளார். ஷான் டெய்ட் சில அதிவேகப் பந்துகளை வீசினாலும் 6 ஓவர்களில் 27 ரன்களை கொடுத்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்