கான்பூர் டெஸ்ட்: 417 ரன்கள் குவித்து இந்தியா சாதனை

செவ்வாய், 24 நவம்பர் 2009 (17:26 IST)
இலங்கைக்கு எதிராக கான்பூரில் நடந்து வரும் 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 2 விக்கெட் இழப்புக்கு 417 ரன்கள் குவித்துள்ளது. டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் இந்திய அணி குவிக்கும் அதிகபட்ச ரன் இதுவாகும்.

இன்று காலை துவங்கிய இப்போட்டியில் பூவா-தலையா வென்ற இந்திய அணித்தலைவர் தோனி பேட்டிங்கைத் தேர்வு செய்தார். துவக்க வீரர்களாகக் களமிறங்கிய சேவாக்-கம்பீர் இணை துவக்கம் முதலே இலங்கைப் பந்துவீச்சை எளிதாக விளையாடியது.

முதலில் நிதானமாக விளையாடிய சேவாக், பின்னர் அதிரடியாக விளையாடி 131 ரன்களைக் குவித்து முரளிதரன் பந்தில் ஆட்டமிழந்தார். மற்றொரு துவக்க வீரர் கம்பீர் நிலைத்து நின்று விளையாடி இரட்டை சதம் அடிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

ஆனால், முரளிதரன் வீசிய பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து 167 ரன்களில் கம்பீர் ஆட்டமிழந்ததால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர்.

திராவிட் அரைசதம்: சேவாக் ஆட்டமிழந்த பின்னர் கம்பீருடன் இணைந்த திராவிட், தனது அனுபவத்தை வெளிப்படுத்தி அரைசதம் அடித்தார். கம்பீர் ஆட்டமிழந்த பின்னர் சச்சினுடன் இணைந்து நிதானமாக விளையாடிய திராவிட் முதல்நாள் ஆட்டநேர முடிவில் 85 ரன்களுடன் களத்தில் உள்ளார். சச்சின் 20 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்