ஐபிஎல் தலைமையகத்திலும் வருமான வரி அதிகாரிகள் சோதனை

வியாழன், 15 ஏப்ரல் 2010 (20:07 IST)
கொச்சி அணியின் உரிமையாளர்கள் இருவரது வீடுகளில் நடத்தப்பட்ட சோதனையைத் தொடர்ந்து, ஐபிஎல் தலைமையகத்திலும் வருமான வரி அதிகாரிகள் இன்று சோதனை மேற்கொண்டனர்.

மும்பையிலுள்ள பிசிசிஐ தலைமையகத்தில்தான் ஐபிஎல் தலைமை அலுவலகம் உள்ளது.இந்த அலுவலகத்தில் 4 பேர் கொண்ட வருமான வரித்துறை அதிகாரிகள் குழு ஒன்று அதிரடியாக புகுந்து சோதனை மேற்கொண்டது.

இந்த சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் உள்ளிட்ட எந்த விவரங்களையும் அதிகாரிகள் தெரிவிக்கவிலை.

முன்னதாக ஐ.பி.எல். கிரிக்கெட்டில் புதிய அணியாக சேர்க்கப்பட்டுள்ள கொச்சி அணி உரிமையாளர்கள் இரண்டு பேர் அலுவலகங்களில் இன்று வருமானவரித் துறை அதிகாரிகள் இன்று அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் உள்ள கொச்சி அணியின் உரிமையாளர்களான பார்னி ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் தலைவர் விபுல் ஷா மற்றும் இரண்டு உரிமையாளர்களுக்குச் சொந்தமான பாவ்நகர் அலுவலகங்களிலும் இன்று வருமான வரி சோதனை நடத்தப்பட்டது.

மத்திய அயலுறவுதுறை இணையமைச்சர் சசி தரூருக்கும், ஐ.பி.எல். தலைவர் லலித் மோடிக்கும் இடையே நடந்த சர்ச்சை அரசியல் வடிவம் எடுத்துள்ளதால், கொச்சி அணியை வாங்குவதில் பணம் போட்டவர்களின் பண ஆதாரம் எங்கிருந்து வந்தது என்ற கேள்வி எழுந்தது.

இந்த நிலையில் வருமான வரி சோதனை நடத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்