உணவு இடைவேளை- இந்தியா 74/2

புதன், 16 ஜனவரி 2008 (10:54 IST)
பெர்த் டெஸ்டில் இந்தியா தன் முதல் இன்னிங்சில் உணவு இடைவேளை வரை 2 விக்கெட் இழப்பிற்கு 74 ரன்கள் எடுத்துள்ளது. ராகுல் திராவிட் 2 ரன்னுடனும், சச்சின் டெண்டுல்கர் 13 ரன்களுடனும் ஆடி வருகின்றனர்.

சேவாகும், வாசிம் ஜாஃபரும் 16 ஓவர்களில் 57 ரன்களை சேர்த்து நல்ல அடித்தளம் அமைத்துக் கொடுத்துள்ளனர். பிரட் லீயின் பந்து வீச்சை சேவாக் அடித்து ஆடினார். 6 சக்தி வாய்ந்த பவுண்டரிகளை அடித்தார்.

ஆட்டக்களம் போகப்போக கடுமையாக எழும்பும். ஆனால் 2வது மற்றும் 3வது நாட்களில் ஆடுவதற்கு சற்றே எளிதாக மாறலாம்.

இந்த டெஸ்ட் தொடரில் சிறப்பான துவக்கம் இதுவே. சேவாக் நிறைய பந்துகளில் ஆட்டமிழப்பது போல் ஆடினாலும், பலமான நடுக்கள ஆட்டக்காரர்கள் நிதானமாக ஆடக்கூடிய துவக்கத்தை கொடுத்துள்ளார்.

மிட்செல் ஜான்சனின் ஒரு பந்து சேவாகின் உடம்பிற்கு அருகில் எழும்பி சென்றது. இவர் தேர்ட் மேன் திசையில் அதனை தூக்கி கட் செய்ய முயன்றார் பந்து விளிம்பில் பட்டு கில்கிறிஸ்டிடம் கேட்சாக அமைந்தது.

வாசிம் ஜாஃபர் 16 ரன்களில் 2 அழகான பவுன்டர்களை அடித்தார். ஆனால் கடைசி ஒரு 10 ஓவர்களில் வெறும் 4 ரன்களே வந்தது என்பதால் பிரட்லீயின் மிகவும் வெளியே சென்ற டிரைவ் ஆட முடியாத பந்து ஒன்றை பேட்டால் தொட முயன்றார், ஆட்டமிழந்தார்.

சச்சினும், திராவிடும் தேனீர் இடைவேளை வரை தொடர்ந்தால் இன்றைய தினம் இந்தியா சிறப்பாக விளையாடியது என்றே கூறவேண்டும்.

வெப்துனியாவைப் படிக்கவும்