இந்திய, வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் போட்டி டிரா

ஞாயிறு, 3 ஜூலை 2011 (12:28 IST)
FILE
பார்படோஸில் நடைபெற்ற இந்திய, மேற்கிந்திய அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி எத்தரப்புக்கும் வெற்றி தோல்வியின்றி டிராவில் முடிந்தது. மேற்கிந்திய அணி ஆட்டம் முடியும் போது 7 விக்கெட் இழப்புக்கு 202 ரன்கள் எடுத்திருந்தது.

ஆட்டம் போதிய வெளிச்சமின்மை காரணமாக நிறுத்தப்பட்டது. முன்னதாக இந்திய அணி 229/3 என்ற நிலையில் களமிறங்கியது லஷ்மண் 87 ரன்கள் எடுத்து எட்வர்ட்ஸிடம் ஆட்டமிழந்தார்.

கோலியும் 27 ரன்கள் எடுத்து சமியிடம் கேட்ச் கொடுத்து எட்வர்ட்ஸிடம் ஆட்டமிழந்தார். தோனி மீண்டும் சந்தர்பாலிடம் கேட்ச் கொடுத்து எட்வர்ட்ஸிடமே ஆட்டமிழந்தார். ரைனா 12 ரன்களையும் ஹர்பஜன் 3 ரன்களையும் எடுக்க இந்தியா 269/6 என்று டிக்ளெர் செய்தது.

இதன் மூலம் 280 ரன்கள் முன்னிலை பெற்று மேற்கிந்திய அணிக்கு 281 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கபபட்டது.

அட்ரியன் பரத் (27), சிம்மன்ஸ் (14) ஆகியோரை இஷாந்த் ஷர்மா அபாரமாக வீழ்த்த சர்வாணை 8 ரன்களில் பிரவீண் குமார் தட்டிச் சென்றார்.

55/3 என்ற நிலையில் மேற்கிந்திய அணி தடுமாறியது. அப்போது பிராவோவும் சந்தர்பாலும் இணைந்து ஸ்கோரை 109 ரன்களுக்கு உயர்த்தினர். சந்தர்பாலை ஹர்பஜன் சிங் அபாரமான ஆஃப் ஸ்பின்னில் வீழ்த்தினார். ஆனால் ரீப்ளேயில் பந்து வெளியே செல்வது போல் தெரிந்தது.

132/5 என்ற நிலையில் உண்மையில் மேற்கிந்திய அணி திணறியது. ஆனால் அதன் பிறகு டேரன் பிராவோ அபாரமான சில ஷாட்களை விளையாட கார்ல்டன் பாஹ் சில அதிரடி ஷாட்களை விளையாடினார் இருவரும் இணைந்து 69 ரன்களைச் சேர்த்தனர்.

கடைசியில் பிராவோவை மிதுன் 73 ரன்களில் வீழ்த்தினார். கார்ல்டன் பாஹ் 61 பந்துகளில் 46 ரன்களை 5 பவுண்டரிகள் ஒரு சிக்சர் உதவியுடன் பெற்றார். ஸ்கோர் 202/7 என்ற நிலையி ஆட்டம் போதிய வெளிச்சமின்மை காரணமாக கைவிடப்பட்டது.

இஷாந்த் ஷர்மா முதல் இன்னிங்சில் 6/53, இந்த இன்னிங்சில் 4/53 என்று முதல் முறையாக டெஸ்ட் கிரிக்கெட்டில் 10 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஆட்ட நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார்.

வெப்துனியாவைப் படிக்கவும்